23.9 C
Colombo
Monday, October 12, 2026

நல்லை ஆதீனத்திடம் ஆசி பெற்ற இந்திய துணைத் தூதுவர்!

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி, நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்தில் அண்மையில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.

குறித்த சந்திப்பின் போது அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் ஆறு திருமுருகன் உள்ளிட்ட இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது சமகால நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக அறிய முடிகிறது.

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவராக செவிதி சாய் முரளி அண்மையில் கடமைகளை பொறுப்பேற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles