23.9 C
Colombo
Monday, October 12, 2026

எரிபொருள் விலைகள் நள்ளிரவு முதல் மாற்றம்!

இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை இலங்கை பெற்றோலிய  கூட்டுத்தாபனம் திருத்தியுள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 09 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, புதிய விலை 447 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 458 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 257 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை மற்றும் ஒட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles