29.5 C
Colombo
Friday, August 21, 2026

நயினாதீவில் வழிபட்ட யோகி பாபு!

பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு மற்றும் கலா மாஸ்டர் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்று நடந்து முடிந்த இசை நிகழ்ச்சிக்காக பாடகர் ஹரிஹரன், தமன்னா, ரம்பா மற்றும் பிரபல தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர், யோகி பாபு,புகழ்,நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா , நந்தினி, மகா லட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் அண்மையில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வை முடித்துக் கொண்டு சில தென்னிந்திய கலைஞர்கள் இந்தியாவை சென்றடைந்தனர்.

நேற்று இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சி பெரும் குழப்பத்தில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles