24.5 C
Colombo
Sunday, October 11, 2026

வடக்கில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு ஜனாதிபதியால் கௌரவம்!

காணொளியாக பார்க்க……

https://fb.watch/pqszjH7GBk/?mibextid=RtaFA8

வடமாகாணத்தில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள ஐஸ்கிரீம் விற்பனை நிலையமொன்றிற்கு meet-and-greet என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் ஜனாதிபதி சாதித்தவர்களை சந்தித்தார்.

சர்வதேச போட்டிகளில் சாதித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பளுத்தூக்கல் வீரன் புசாந்தன்,கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி அக்செயா அனந்தசயனன்,தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை மாணவி ஜெரால்ட் அமல்ராஜ் வனிஷ்கா, வாகனத்தை தாடியால் இழுத்து சாதனை புரிந்த செல்லையா திருச்செல்வம் உள்ளிட்ட பலரையும் ஜனாதிபதி சந்தித்து வாழ்த்தினார்.

கல்வி, விளையாட்டு, நாடகம் மற்றும் திரைப்படக் கலை, சமூக ஊடகங்கள் போன்ற பல துறைகளில் திறமை செலுத்தியோர் கலந்துகொண்டதோடு அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பாடல் போட்டியில் வெற்றி பெற்ற கில்மிஷாவும்  விளையாட்டு துறையில் சாதித்த அகிலத்திருநாயகியும் ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்டனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles