கொரோனா மற்றும் டெல்ட்டா திரிபு தீவிரமாக பரவிவரும் மாகாணங்களை உடனடியாக முடக்குவது குறித்து அரச உயர்மட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழம நடக்கும் கொரோனா செயலணியிலும் தீர்மானிக்கப்படவுள்ளது.
நாட்டை முற்றாக முடக்காமல், இப்போது கொரோனா மற்றும் டெல்ட்டா திரிபு பரவல் தீவிரமாக இருக்கும் மாகாணங்களை மட்டும் முடக்குவதற்கும், மாகாணங்களுக்கு இடையே மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாட்டை விதிக்கவும்
ஆராயப்படுகிறது.
இன்று மாலை இது தொடர்பில் விசேட அறிவிப்பை விடுக்க கொரோனா செயலணி எதிர்பார்த்துள்ளதாக அறியமுடிகிறது.
கொழும்பு,கம்பஹா,களுத்துறை, குருநாகல், புத்தளம், காலி ஆகிய ஆறு மாவட்டங்களில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதென இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

