24.5 C
Colombo
Wednesday, October 7, 2026

யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் “முத்தழிழ் விழா 2023”

யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் “முத்தழிழ் விழா 2023” இன்றைய தினம்(29)துர்க்காதேவி மணி மண்டபத்தில் இடம்பெற்றது.

ஐ.பி.சி தமிழின் அனுசரணையுடன் யாழ் மாநகர சபையின் ஆணையாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், சிறப்பு விருந்தினர்களாக ஐபிசி தமிழ் முகாமைத்துவ பணிப்பாளர் தி.ராஜன் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், யாழ் மாநகர சபை கலைத்துறைக்கு வழங்கும் உயரிய விருதான “அரசகேசரி” விருதும் வழங்கப்பட்டது.

இதன்படி, இயல் துறைக்காக கலாபூஷணம் கோகிலா மகேந்திரனுக்கும் இசைத்துறைக்கு கலாபூஷணம் எம்.பி.பாலகிருஷ்ணனுக்கும் நாடகத்துறைக்கு கலாபூஷணம் கீர்த்தி சாந்தினி சிவநேசன் ஆகியோருக்கு அரசகேசரி விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

விருதுகள் வழங்கும் நிகழ்வை தொடர்ந்து கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles