23.9 C
Colombo
Sunday, October 11, 2026

பாடசாலை நூலக அபிவிருத்தி மற்றும் மொழி இலக்கிய கலை மேம்பாட்டுத்திட்டம் யாழ். இந்துக் கல்லூரியில் முன்னெடுப்பு

பாடசாலை நூலக அபிவிருத்தி மற்றும் மொழி இலக்கிய கலை மேம்பாட்டுத்திட்டம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் உயரதிகாரிகள் பாடசாலை மாணவ மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து ஓவியம் வரைவது தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சிப் பட்டறை நடாத்தப்பட்டு, ஓவியம் வரைவதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

பாடசாலைகளின் நூலகத்தினை அபிவிருத்தி செய்வதுடன், கலை இலக்கிய மொழிப்புலமையினையும் மேம்படுத்தும் நோக்கில் அமைச்சினால் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காணொளியாக பார்க்க…https://fb.watch/m3tl4zIlww/?mibextid=Nif5oz

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles