வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வியாபாரக்கற்கைகள் பீடத்தின் தொழில் சமூகத்தொடர்பு மையத்தின் ஊடாக வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கு தலைமைத்துவப்பயிற்சி வழங்குவதற்கான ஆரம்ப நிகழ்வானது ஜக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிறுவனம் (UNDP) மற்றும் ஏனைய பங்காளர்களான சமூக அபிவிருத்தி நிறுவனங்களின் அனுசரனையுடன் இன்று செவ்வாய்க்கிழமை(31) ஆரம்பமானது.
இந் நிகழ்வானது துணைவேந்தர் பேராசிரியர் த. மங்களேஸ்வரன் தலைமையில், துணைவேந்தர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
வடக்குக் கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கு தலைமைத்துவ பயிற்சியை மேற்கொள்ளுவதற்கு ஒன்பது பிரிவுகளாக இப்பயிற்சி வகுப்பானது பெப்ரவரி 11ம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆரம்பிக்கவுள்ளது.
வவுனியாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் வியாபார கற்கைகள் பீட பீடாதிபதியால் செயற்றிட்ட பிரதிநிதி மாலின் ஹேர்விக்கின் சேவையைப் பாராட்டி நினைவுச்சின்னம் ஒன்றை வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் வியாபாரக்கற்கைகள் பீட பீடாதிபதி கலாநிதி யோ. நந்தகோபன், யு.என்.டி.பி பிரதிநிதி மாலின் ஹேர்விக், வவுனியா மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் திரேஸ்குமார், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரம், தொழில் சமூகத்தொடர்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.சிவனேந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


