28.9 C
Colombo
Wednesday, October 14, 2026

வவுனியா கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம் – பாதுகாப்பை உறுதிப்படுத்த ஊர் மக்கள் கோரிக்கை!

வவுனியா மாமடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கள்ளிக்குளம் சிதம்பரம் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளுள் ஊடுருவிய காட்டுயானைகள் வயல்கள், தென்னைகள் மற்றும் வாழை மரங்களை துவம்சம் செய்துள்ளன.

இந்தச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

அண்மைக்காலமாக இப்பகுதிகளில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதுடன் இங்கு நுழையும் காட்டுயானைகள் கள்ளிக்குளம் சிதம்பரம் கிராமங்களுக்குள் உட்புகுந்து தொடர்ந்தும் மக்களை அச்சுறுத்தி வருகின்றன.

இப் பிரதேசத்தில் கடந்த ஒரு வாரகாலமாக என்றுமில்லாத வகையில் தனியன் காட்டுயானை ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றது.

மேலும் இவ்வாறு இரவு நேரத்தில் திடீரென கிராமத்திற்குள் நுழைகின்ற காட்டுயானைகளினால் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அத்துடன் ஊருக்குள் யானை நுழைந்ததை அறிந்து கொண்ட மக்கள் விழிப்படைந்ததுடன் அதனை விரட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சமீப காலமாக காட்டு யானைகள் கள்ளிக்குளம் சிதம்பரம் கிராமங்களுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருவதினால் இரவு வேளையில் மக்கள் நித்திரையின்றி விழித்திருக்கின்றனர் இதனால் பல்வேறு உடல் உள உபாதைகளுக்குள்ளாகியும் வருகின்றனர்.

எனவே காட்டு யானைகளை விரட்டுவதற்க்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles