வவுனியா மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோர் சங்க செயலாளர் சிவனாந்தன் ஜெனிற்றாவின் வீட்டின் மீது கழிவொயில் வீச்சு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது வீட்டின் முன்றலில் வருகை தந்த வன்முறை கும்பலொன்று போத்தல்களால் கழிவொயில் வீச்சை நடாத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக வவுனியா மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோர் சங்க செயலாளரிற்கு பொலிசாரால் ஜனவரி 31ம் திகதி யாழ்ப்பாண நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

