24.5 C
Colombo
Wednesday, October 7, 2026

முட்டாள்கள் தினத்தில் கொண்டாடப்படும் பிறந்தநாள்

உலகளவில் பெருமையாக போற்றி புகழும் ஒவ்வொரு விடயத்தையும் கொண்டாடும் வகையில் மகளீர் தினம், நண்பர்கள் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், சிறுவர் தினம், தொழிலாளர்கள் தினம், என மக்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கு என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஏனைய தினங்களுக்கு உரிமை கொண்டாடுவதைப் போல இத் தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாக சொல்லிக் கொள்ள எவரும் முன்வருவதில்லை. அதே நேரம் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அடுத்தவரை முட்டாளாக்க முனையும் “முட்டாள்தனமான அறிவாளிகளின் தினம்” என்று இன்றைய தினத்தைக் கூறினாலும் பிழையாகாது.

வீட்டில் உள்ளவர்களிடம் அன்று ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்ட நாட்களை மறக்க முடியாது. அதேபோல ஒருவரையாவது ஏமாற்றி விட வேண்டும் என்ற விளையாட்டுத்தனமும் அதில் இருந்த ஆர்வமும் யாராலும் மறக்க முடியாது.

உலகம் முழுவதும் பலரைக் குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச் செல்லும் இன்றைய தினம், எப்படி உருவானது? அதன் வரலாற்றுப் பின்னணியில் பல கதைகள் உண்டு. 1446ஆம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது இது போன்ற பல்வேறு புராண கருத்துக்களும் கதைகளும் இத் தினத்திற்கு உரியதாக இருக்கின்றது.

ஏப்ரல் முதலாம் திகதி சர்வதேச “மீன்கள்” தினமாகபிரான்ஸில் முதல் முதலில் கொண்டாடப்பட்டது. ஆனால் இத் தினத்தை எவரும் கருத்தில் கொள்வதில்லை. ஒரே நாளில் இரு தினங்கள் இருக்கின்றன ஆனால் மக்களால் அதிகம் ஈர்க்கப்பட்டு பேசப்பட்டு வருவது இவ் முட்டாள் தினமேயாகும்.

உலகின் முட்டாள் என்பதற்கான சரியான விளக்கம் என்ன? யார் முட்டாள்? முட்டாள்களின் குணம் என்ன? தெளிவானவர்கள் யார்? இது போன்ற கேள்விகளை எழுப்பும் போது அதற்கான சரியான விடையைத் தேடிக் கொள்வது சற்று கடினமாகவே உள்ளது. ஆறறிவு இருந்தும் சிறு சிறு விடயங்களுக்கு ஏமாந்து தன் வாழ்க்கையில் பின்னடையும் அறிவாளிகளை முட்டாள்கள் எனவும் போதிய கற்றல் அறிவு இல்லாவிட்டாலும் சிந்தித்து செயற்படும் ஏமாறாதவர்களை அறிவுள்ளோர் என்றும் கூறலாம்.

இக் காலக்கட்டத்தில் உலகில் இருக்கும் மிகச் சிறந்த முட்டாள்களாக விளங்கும்; கல்வி கற்றும், பட்டங்கள் பல தன்வசம் கொண்டு, கற்காவிட்டாலும் அனுபவ கல்வியில் தன் வாழ்வை நடத்தும் ஆறறிவு கொண்ட இன்னமும் சிகரட் குடிக்கும் அறிவுள்ள முட்டாள்களுக்காக இத் தினத்தினை சமர்ப்பிக்கலாம்.. சிகரட்டிற்கு ஏமாந்து இன்னுமும் புகைப்பவர்கள் இவ் நவீன யுகத்திலும் கூறும் சில விடயங்கள் “சிகரட் குடித்தால் தான் நித்திரை கொள்ள முடியும், மலசலக்கூடம் சென்றால் சிகரட் குடித்தால் தான் மலம் கழிக்க முடியும், கவலையை போக்கவும் மன அமைதிக்கும் சிகரட் புகைக்க வேண்டும், சிகரட் புகைத்தால் நன்றாக சிந்திக்கவும் செயற்படவும் முடியும்” போன்ற முட்டாள் தனமான கருத்துக்களை பகிர்வது மட்டும் அல்லது இளம் சந்ததியினருக்கும் பரப்பி வருகின்றனர். அதுமட்டும் அல்லாது சிகரட் குடித்த பின் யாரும் விரும்பி அருகே செல்ல முடியாதவாறான வாய் நாற்ற காரர்களாகவும் கண்கள் சிவந்து, கன்னங்களில் குழிவிழுந்து தன் வயதை விட முதிர்ந்த தோற்றத்தை உடையவர்களாக மாறுகின்றனர். அவர்களின் மாற்றத்தை அவர்களே அறிய முடியாத கோமாளிகள் ஆகின்றனர். இவ்வாறான மாற்றம் மட்டுமா நிகழ்கின்றது என்று சிந்தித்து பார்த்தால் எதிர் காலத்திற்கு மிக முக்கியமான ஓர் விடயம் தான் தன் சந்ததியைப் உருவாக்க கூடிய ஆண்மை, அவ் ஆண்மையிலும் குறைபாடு ஏற்படுகின்றது.

இவ்வாறான மறுக்க முடியாத உண்மைகளை அறிந்திருந்தும் இது வரை காலமும் ஆறறிவு இருந்தும் சிகரட்டிற்கு ஏமாந்து புகைப்பவர்களுக்கு ஓர் சுவாரசியமான அம்சம் தான் ஏப்ரல் 01ஆம் திகதி, ஏன் என்றால் அன்று தான் சிகரட் புகைப்பவர்கள் பிறந்திருக்கின்றனர் என்று கூறுவதோடு ஏமாந்த முட்டாள்களுடன் இணைத்து “சிகரட் புகைத்தால் தான் மகிழ்ச்சி ஏற்படும், சிந்திக்கலாம், மலம் கழிக்கலாம் என்று நினைத்துக் கொண்டும், பேசிக் கொண்டும்” இருக்கும் முட்டாள்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்ளலாம் . “சிகரட் முட்டாள்களின் அடையாளம்” என்ற சிறந்த வாழ்த்து வசனமானது அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்றாகும். சிகரட்டிற்கு ஏமாந்து குடிக்கும் ஏமாளிகளுக்கு என்னைப் போல நீங்களும் “இனிய பிறந்தநாள்” வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்.

சிகரட் புகைப்பவர்களுக்கு முட்டாள்கள் தினத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக வித்தியாசமான முறைகளில் பல்வேறு குழுக்களின் தலைமையிலான செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றிருந்தன.

ஞா.த்ரிஷா

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles