25 C
Colombo
Saturday, October 10, 2026

2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிப்பு!

சுதந்திர இலங்கையின் 76வது வரவு செலவுத் திட்டம், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவினால் இன்று (12) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 13ம் திகதி முதல் 7 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.அதனைத் தொடர்ந்து, 22ம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து பரவி வரும் கொரோனா வைரஸ் பரவல், முடக்கத்தினால் நாட்டின் பொருளாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் சலுகையை எதிர்பார்த்திருக்கும் இந்த தருணத்தில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்டம் குறித்து, நாட்டு மக்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles