முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வரும் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அலுவலகத்துக்கு முன்பாக இன்று காலை 10.15 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
யுத்தம் முடிவுக்கு வந்து பல ஆண்டுகளாகியும் இன்றுவரை எந்த தீர்வுகளும் தமக்கு கிடைக்கவில்லை என்றும் சர்வதேச சமூகமே தமக்கான தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


