29.5 C
Colombo
Friday, August 21, 2026

பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் பங்காளிக்கட்சித் தலைவர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று(28) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த சந்திப்பானது இன்று மாலை 5.30 மணியளவில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இச் சந்திப்பில் பிரதமரும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானம் உள்ளிட்ட மேலும் பல விவகாரங்கள் குறித்த இந்த சந்திப்பில் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles