24.5 C
Colombo
Wednesday, October 7, 2026

குறிகட்டுவான் இறங்குதுறை வீதிப் புனரமைப்புக்கு அங்குரார்ப்பணம்!

குறிகட்டுவான் இறங்குதுறைக்கு முன்னரான நடைபாதையுடன் கூடிய வீதிப் புனரமைப்பு 299.80 மில்லியன் ரூபாவில் அபிவிருத்தி செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு  நேற்றைய தினம் குறிகட்டுவான் இறங்குதுறையில் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ் மாவட்டச் செயலர் ம.பிரதீபன், வேலணை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், வடக்கு மாகாணப் பணிப்பாளர், மாவட்ட பொறியியலாளர்கள், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், நெடுந்தீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
வீதி அபிவிருத்திப் பணி 299 மில்லியன் ரூபா செலவில் முதல் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது. அதேநேரம், 800 மில்லியன் ரூபா செலவில் குறிகாட்டுவான் இறங்குதுறையும் மறுசீரமைக்கப்படவுள்ளது. அத்துடன், குறிகாட்டுவான் வரையிலான பிரதான வீதியில் 3.2 கிலோ மீற்றர் அடுத்த ஆண்டு புனரமைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியளித்தார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles