யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூளாய் பகுதியில் இன்று மாலை இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதன்போது ஒரு மோட்டார் வண்டி தீக்கிரையாக்கப்பட்டதுடன் சில வீடுகளும் சேதப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வட்டுக்கோட்டை பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்த வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் சுமூகமான நிலைமையை ஏற்படுத்துவதற்காக மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

