24.5 C
Colombo
Wednesday, October 7, 2026

இந்திய இழுவை மடிப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து பேரணி!

இந்திய இழுவை மடிப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ்ப்பாண மாவட்ட தீவக கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ் நகரில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் இன்று காலை பேரணியை ஆரம்பித்த கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் நீரியல் வள திணைக்களம், இந்திய துணைத் தூதரகம், யாழ்ப்பாண மாவட்ட செயலகம், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் என்பவற்றுக்கு பேரணியாக சென்று மகஜரை கையளித்தனர்.
தீவக மீனவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் போராட்டத்திற்கு யாழ்ப்பாணத்திலும் அதே போன்று வேறு மாவட்டங்களிலும் உள்ள பல்வேறு அமைப்புக்கள் தமது ஆதரவை வழங்கின.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles