எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து யாழ்ப்பாணத்தில் பிரசார கூட்டமொன்று கீரிமலை பகுதியில் நேற்றையதினம் நடைபெற்றது.
காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்குட்பட்ட கீரிமலை கூவில் சிவானந்தா விளையாட்டு கழக மைதானத்தில் நேற்று இரவு 7 மணியளவில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பங்கேற்புடன் கூட்டம் இடம்பெற்றது.
பிரசார கூட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள், இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

