32.2 C
Colombo
Friday, October 9, 2026

யாழில் இளைஞனை கடத்திச் சென்று சித்திரவதை செய்து வீதியில் போட்டுவிட்டு தப்பிய கும்பல்!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இளைஞன் ஒருவனை கடத்திச் சென்ற கும்பல் வாளால் வெட்டி சித்திரவதை செய்த சம்பவமொன்று இன்று(26) மாலை இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சியில் இருந்து காதலியை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதிக்கு இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.

இதன்போது அங்கு கூடிய இனந்தெரியாத நபர்கள் இளைஞனை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று தலை முடியை வெட்டி வாளால் உடலில் வெட்டி சித்திரவதை செய்துள்ளனர்.

இதன்பின்னர் குறித்த இளைஞனை உடுவில் பகுதியிலுள்ள வீதியொன்றில் போட்டுவிட்டு குறித்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது.இதனால் அப்பகுதியில் பரபரப்பான சுழல் ஏற்பட்டுள்ளது.

பூநகரி கிராஞ்சியை சேர்ந்த பிரதீபன் வினுஜன் என்ற இளைஞரே படுகாயமடைந்துள்ளதுடன் பொலிஸாருக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

படுகாயமடைந்துள்ள இளைஞனை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காணொளியை பார்க்க…..

https://www.facebook.com/share/v/XD1WhULaYqKhDqfC/?mibextid=oFDknk

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles