ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் மாதம் செப்டம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது.
அதற்கான வேட்புமனுக்கள் ஆகஸ்ட்15 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு வௌியிட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி வெளியிடப்பட்ட இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களில் பின்வரும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சனாதிபதித் தேர்தல்கள் சட்டம்
2 ஆம் பிரிவின் கீழான கட்டளை
சனாதிபதியின் பதவிக்காலம் 2024, நவெம்பர் மாதம் 17 ஆந்; திகதி முடிவுறுகின்றமையினாலும்,பதவி வகிக்கும் சனாதிபதியின் பதவிக்காலம் முடிவுறுவதற்கு முன்னரான ஒரு மாதத்திற்குக் குறையாத மற்றும்
இரண்டு மாதங்களுக்கு மேற்படாததுமான காலப் பகுதிக்குள் சனாதிபதித் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமென அரசியலமைப்பின் 31 ஆவது உறுப்புரையின் (3) ஆவது உப உறுப்புரை ஊடாக தேவைப்படுத்தப்பட்டிருப்பதனாலும்,
அரசியலமைப்பின் 104ஆ ஆவது உறுப்புரையுடன் இணைத்து வாசிக்கப்படுகின்ற, 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவினூடாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கிணங்க;
1. 2024, ஓகத்து மாதம் 15 ஆந் திகதி சனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களை பெயர்குறித்து நியமிக்கும்
திகதியாகவும் ;
2. தேர்தல் ஆணைக்குழு அலுவலகம், சரண மாவத்தை, இராஜகிரிய, அந்த தேர்தலுக்கான வேட்பாளர்களை
பெயர்குறித்து நியமிப்பதற்கான இடமாகவும் ;
3. 2024, செத்தெம்பர் மாதம் 21 ஆந் திகதியை அந்தத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடாத்தப்படும் திகதியாகவும்,
இந்தக் கட்டளை ஊடாக நிர்ணயிக்கின்றோம்.
1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, சனாதிபதித் தேர்தல்கள் சட்டம் 8 ஆம் பிரிவின் கீழான அறிவித்தல்
1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, சனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் கட்டளை வெளியிடப்பட்ட நாளான 2024.07.26 ஆந் ஆந் திகதிக்கும் பெயர் குறித்த நியமன நாளான 2024.08.15 ஆந் திகதிக்கு முன்னைய நாளான 2024.08.14 ஆந் திகதி நண்பகல் பன்னிரண்டு மணிக்கு முன்னர் அல்லது அதற்கிடைப்பட்ட காலப்பகுதியினுள் அலுவலக நாட்களில் (சனிக்கிழமை
மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்கள் தவிர்ந்த) மு. ப. 8.30 மணி முதல் பி.ப. 4.15 மணி வரையும், 2024.08.14 ஆந் திகதி மாத்திரம் மு.ப. 8.30 மணிமுதல் நண்பகல் 12.00 மணி வரையும் சனாதிபதித் தேர்தலுக்காக வேட்பாளரொருவரால் அல்லது வேட்பாளர்
சார்பாக வேறொருவரால்,
(அ) அந்த வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சியொன்றினால் பெயர்குறித்து நியமனம் செய்யப்பட்ட வேட்பாளரொருவராயின், செல்லுபடியான பணத்தால் ஐம்பதாயிரம் ரூபாவும்;
(ஆ) அந்த வேட்பாளர் வேறேதும் அரசியற் கட்சியொன்றினால் அல்லது வாக்காளரொருவரினால் பெயர்குறித்து நியமனம்
செய்யப்பட்ட வேட்பாளரொருவராயின், செல்லுபடியான பணத்தால் எழுபத்தையாயிரம் ரூபாவும்;
தேர்தல் ஆணைக்குழுவிடம் அல்லது குறித்த கடமைக்காக தேர்தல் ஆணைக்குழுவினால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள
எவரேனுமொருவரிடம் அல்லது இராஜகிரிய, சரண மாவத்தையில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் வைப்புப் பணமாக வைப்பிலிடப்பட வேண்டுமென; அல்லது வைப்பிலிட தயாராக வேண்டுமென; 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் 8 ஆம் பிரிவுக்கமைய அறிவித்தல் வழங்கப்படுகின்றது.

