23.9 C
Colombo
Monday, October 12, 2026

சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பாக 15 பேர் கொண்ட குழுவை அமைக்க முடிவு!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட சமூக மட்ட அமைப்பினர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் என வைத்தியர் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகள் உட்பட 16 குற்றச்சாட்டுகளை எழுத்துமூலம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கினர்.

அந்தவகையில் குறித்த ஒவ்வொரு குற்றச்சாட்டு தொடர்பாகவும் விபரமான கலந்துரையாடல் இடம்பெற்றது. அதில் உடனடியாக நிவர்த்தி செய்யப்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்யுமாறு கூறிய அமைச்சர், தான் குறித்த துறைசார்ந்த அமைச்சர் இல்லை என்பதால் ஏனைய விடயங்கள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் கலந்துரையாடி தீர்க்கமான ஒரு பதிலை வழங்குவதாக கூறினார்.

அத்துடன் 15 அங்கத்தவர் உள்ளடங்கிய அபிவிருத்தி குழு ஒன்று தெரிவுசெய்யப்பட்டு மாதாந்தம் ஒரு கலந்துரையாடலை வைத்தியசாலை நிர்வாகத்துடன் நடாத்த வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன்,வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரண, யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்,சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் கோ.ரஜீவ், தென்மராட்சி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

“சாவகச்சேரி மருத்துவ மனைக்கு போக இருந்தேன். சிலர் வேண்டாம் என்றார்கள்” அதனால் போகவில்லை என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தன்னிடம் தெரிவித்தார் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மனோ கணேசன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றையிட்டுள்ளார்.

அந்த பதிவில்,சுகாதார அமைச்சர் ரமேஷ்பத்திரண, யாழ்ப்பாணம் போறார் என அறிந்ததும், பாராளுமன்றத்தில் அவரிடம் “சாவகச்சேரி மருத்துவ மனையில் ஏதோ பிரச்சினை இருப்பதா பேசப்படுகுது. யாழ்ப்பாணம் போகும் போது அங்கே போய் பாருங்க” என்றேன்.

பிறகு அவர் அங்க போகவில்லை என அறிந்ததும், அலைபேசியில் அழைத்து, “ரமேஷ், யாழில் ஏன் சாவகச்சேரி மருத்துவமனைக்கு போகலை? உங்கள் பயண திட்டத்தில் அது இருக்கலையா? அல்லது நிக‌ழ்ச்சி நிரல் இடையில் மாற்றபட்டதா? அங்கே போய் பாருங்கள், என்று சொல்லி இருந்தேனே?” என்று கேட்டேன்.

சாவகச்சேரி மருத்துவ மனைக்கு போக இருந்தேன். மருத்துவ துறையைச் சேர்ந்த சிலர் வேண்டாம் என்றார்கள்” அதனால் போகவில்லை.”ஆனால் அந்த மருத்துவ மனைக்கு 20மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்து விட்டு வந்தேன்” என்றார்.

குறித்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles