24.5 C
Colombo
Wednesday, October 7, 2026

காதல் விவகாரத்தால் துண்டாடப்பட்ட இளைஞனின் கை – கிளிநொச்சியில் சம்பவம்!

காதல் விவகாரம் காரணமாக கை துண்டாடப்பட்ட நிலையில் இளைஞரொருவர் படுகாயமடைந்தது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று(23) இடம்பெற்றுள்ளது.

காதல் பிணக்கு காரணமாக ஏற்பட்ட முரண்பாடே இச்சம்பவத்துக்கு வழியமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் தனுஜன் எனும் 18 வயதுடைய இளைஞனின் கையே துண்டாடப்பட்டுள்ளது.

காயமடைந்த இளைஞன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles