24.5 C
Colombo
Wednesday, October 7, 2026

இந்தியாவுக்கு பறந்தார் ரணில்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவின் புதுடில்லிக்கு இன்று காலை  பயணமானார்.

தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக தெரிவாகியுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09) காலை இந்திரா காந்தி விமான நிலையத்தின் ஊடாக இந்தியா சென்றடைந்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் சார்பில் மேலதிக செயலாளர் பி.குமரன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்து சமுத்திர வலய மேலதிக செயலாளர் புனித் அகர்வால், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஷெனுகா செனவிரத்ன ஆகியோர் ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளித்ததோடு இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நடன நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

இந்தியப் பிரதமரின் பதவிப் பிரமாண நிகழ்வு இன்று (09) புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு முன்னிலையில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகை குறித்து இந்திய ஊடகங்கள் விசேட பிரசாரம் வழங்கியிருந்ததோடு , தலைநகர் புதுடெல்லியின் பிரதான சுற்றுவட்டங்களைச் சுற்றி இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடியின் படங்கள் அடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன மற்றும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரும் இணைந்துகொண்டுள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles