24.5 C
Colombo
Wednesday, October 7, 2026

யாழில் முச்சக்கரவண்டியும் பட்டா வாகனமும் விபத்து!

யாழ்ப்பாணம் – நாலுகால்மட சந்தியில் முச்சக்கரவண்டியொன்றும் பட்டாரக வாகனமும் இன்று(23) மதியம் மோதி விபத்துக்குள்ளானது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மானிப்பாய் – காரைநகர் பிரதான வீதியில் நாலுகால்மடம் சந்தியிலுள்ள அரைக்கும் ஆலை ஒன்றில் இருந்து பிரதான வீதியில் முச்சக்கர வண்டி பயணிக்க தொடங்கிய நிலையில் பின்புறமாக ஆறுகால்மடம் பகுதியில் இருந்து வருகை தந்த பட்டாரக வாகனம் மோதியது.

காணொளியாக பார்க்க…..

https://www.facebook.com/share/v/G8d8recrVHH3642m/?mibextid=oFDknk

முச்சக்கர வண்டியினை செலுத்திய ஆறுகால்மடம் பகுதியினை சேர்ந்த 20 வயதான அஜிந்தன் எனும் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.

இதேவேளை பட்டாரக வாகனம் மின்கம்பத்துடன் மோதி பகுதியளவில் சேதமடைந்த நிலையில் வாகன சாரதி காயங்களின்றி மீட்க்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles