ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராக அருண் – கட்சிக்குள் அதிருப்தி?
https://t.co/lwhZ6zbwyY@officialunp @RW_UNP #jaffna pic.twitter.com/Y0CQ3dvAAY
— Jaffnagallery News (@JaffnaGallery) March 21, 2024
யாழ்ப்பாணத்தில் இன்று மாலை தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க குறித்த விடயத்தை தெரிவித்தார்.
காணொளியை பார்க்க…..
https://fb.watch/qY4Tbpidzc/?mibextid=RtaFA8
கடந்த முறை யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அருண் சித்தார்த் உள்ளிட்ட குழுவினரை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது யாழ்ப்பாணத்தில் நடந்த போராட்டமொன்றின்போது ஹிருணிகா பிரேமச்சந்திரவுடன் முரண்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சித்தவருக்கு கட்சியின் மாவட்ட அமைப்பாளர் நியமனமா என கட்சியின் ஆதரவாளர்கள் இடையே அதிருப்தி உருவாகியுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதான அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்டு வருகிறார்.
இன்றைய கூட்டத்தில் இதுவரை காலமும் கட்சியின் ஆதரவாளர்களாக உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக இருந்த பலரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

