29.5 C
Colombo
Saturday, October 10, 2026

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் தோற்கடிப்பு!

எதிர்க்கட்சியினால் கடந்த 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (21) பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக 117 வாக்குகளும், 75 ஆதரவாக வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய 42 மேலதிக வாக்குகளால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கடந்த 19, 20 மற்றும் 21ஆம் திகதிகளில் (இன்று) விவாதம் நடத்தப்பட்டதுடன், இன்று பிற்பகல் 4.30 மணிக்கு குறித்த பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles