25 C
Colombo
Tuesday, October 13, 2026

யாழ், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர்களின் பதவிக்காலம் நீடிப்பு!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர்களின் பதவிக் காலத்தை ஒரு வருடம் நீடிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் ஓய்வு பெற்ற நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்டத்துக்கான மாவட்ட செயலாளர் பதவி வெற்றிடமாகவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளார்.

மேற்படி இரண்டு அரச அதிபர்களுக்கும் மேலும் ஒரு வருடம் சேவை நீடிப்பு வழங்கவே நாளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக்கு உரிய பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் திகதி யாழ்ப்பாணம் வந்த வேளையில் இரண்டு மாவட்ட செயலாளர்களும் அமைச்சர் ஒருவரின் சிபார்சுடன் சேவை நீடிப்புக் கோரிக்கை சமர்ப்பித்தனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் கடந்த 12ஆம் திகதி ஓய்வு பெற்றுச் சென்ற கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தமக்குச் சேவை நீடிப்புக் கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையில் இன்று வரை தனது உத்தியோகபூர்வ வாகனத்தை மீளக் கையளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

(முரசு இணைய பத்திரிகை)

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles