நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் தாதியர்கள் தவிர்ந்த 72 சுகாதார தொழிற்சங்கங்களின் வைத்தியசாலை பணியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகள் இரண்டாம் நாளாக பாதிப்படைந்துள்ளது.
அரச வைத்தியசாலைக்கு வரும் பொதுமக்கள் சுகாதார மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளமை அவதானிக்க முடிகிறது.
தடைப்படும் வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் தடையின்றி முன்னெடுப்பதற்கு சில வைத்தியசாலைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
ஆனபோதும் நாடாளாவியரீதியில் வைத்தியசாலைகளுக்கு வரும் பெரும்பாலான பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்ற நிலைமை தொடர்வதாக யெப்னா கலரி செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வைத்தியர்களுக்கு 35000 DAT கொடுப்பனவை அதிகரித்தது போல தமக்கும் வழங்ககோரி சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

