29.5 C
Colombo
Friday, August 21, 2026

பருத்தித்துறை தீ விபத்து; நீதவான் சம்பவ இடத்தில் விசாரணை

காணொளியாக பார்க்க….

https://fb.watch/pjlVTINqY4/?mibextid=RtaFA8

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் தீப்பற்றி இருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பாக பருத்தித்துறை நீதவான் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.

குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை(02) அதிகாலை வேளை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இருவரும் களஞ்சியசாலையில் சென்று கதவை பூட்டி விட்டு நித்திரைக்கு சென்றபோதே அதிகாலை 12.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முற்பட்டபோதும், களஞ்சியசாலையில் உறக்கத்தில் இருந்த இருவரும் உடல் கருகி பலியானதுடன் அங்கிருந்த பொருட்களும் தீயில் எரிந்ததால் அருகில் இருந்த வாகன தரிப்பிடத்திலும் தீப்பரவி சேதமடைந்தது.

மலையகத்தின் உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற 46 வயதானவரும் வேலாயுதம் ரவி என்கிற 38 வயதானவருமே உயிரிழந்துள்ளனர்.

களஞ்சியசாலையில் இருந்த சிலிண்டர் தீ விபத்துக்கு காரணமாக இருக்குமா என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தீப்பற்றியமைக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துரை கிரிஷாந்தன், தடயவியல் பொலிஸார், பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles