31.7 C
Colombo
Sunday, October 11, 2026

ஐனாதிபதி வடக்கிற்கு விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் நான்காம் திகதி வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

இதன்போது காணிவிடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சம்பந்தமான அறிவிப்பினை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து 250மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதனையடுத்து, அவர் கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் யாழ்.மத்திய கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது பிரசன்னமாகவுள்ளார்.

இதற்கமைய 4ஆம் திகதி யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றார். அன்று மாலை சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திக்கின்றார்.

5ஆம் திகதி காலையில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் இடம்பெறும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டத்திலும் மாலை பூநகரிப் பிரதேச அபிவிருத்தி மற்றும் நகரமயமாக்கல் தொடர்பில் பூநகரிப் பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

6 ஆம் திகதி காலை யாழ் மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம், வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் கிளிநொச்சி அறிவியல் நகர் பீடாதிபதிகள் உள்ளிட்ட விரவுரையாளர்களுடனான சந்திப்பை தொடர்ந்து சர்வ மதப் பிரதிநிதிகள், மீனவ அமைப்புக்கள் ஆகியவற்றுடன் போதனா வைத்தியசாலையின் நலன்புரி சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மாலை மாவட்டச் செயலகத்தில் நிபுணர்களுடனான சந்திப்பும் 7 ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் பணை தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles