23.9 C
Colombo
Monday, October 12, 2026

BREAKING| ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரால் பொது மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவொன்று 2019 மற்றும் 2022 க்கு இடையில் பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்ததன் மூலம் பொது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்மானித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோர் இந்த விவகாரத்தில் பெரும்பான்மையான தீர்மானத்தை வழங்கினர், நீதியரசர் பிரியந்த ஜயவர்தன இதற்கு மறுப்பு தெரிவித்தார்.

இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கி நாணயச் சபை, முன்னாள் நிதிச் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோரும் மனுதாரர்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என தீர்ப்பளிக்கப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தொழிலதிபர்களுக்கு 681 பில்லியன் ரூபாய் வழங்குவது இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதில் தாமதம் மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடியின் போது 500 மில்லியன் அமெரிக்க டொலர் இறையாண்மைப் பத்திரங்களைத் திருப்பிச் செலுத்துதல் உள்ளிட்ட பொருளாதார தவறான நிர்வாகப் பிரச்சினைகளையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எவ்வாறாயினும், பிரதிவாதிகள் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என்று நீதிமன்றம் தீர்மானித்தது. இருப்பினும் மனுதாரர்களுக்கு தலா 150,000 ரூபாவை செலவுத் தொகையாக வழங்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles