30.6 C
Colombo
Saturday, October 10, 2026

சாவகச்சேரி விபத்தில் இளைஞர் பலி!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நுணாவில் ஏ9வீதியில் இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

காணொளியாக பார்க்க…https://fb.watch/npUXmPXt2k/?mibextid=Nif5oz

நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரியில் இருந்து நுணாவில் நோக்கிச் பயணித்த பிக்கப் வாகனமும் ஒன்றோடு ஒன்று மோதியதாலேயே நேற்று இரவு விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நுணாவில் பகுதியில் விடுதி ஒன்றின் உரிமையாளரான 40 வயதான பரமநாதன் யோதீஸ்வரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles