இன்று அதிகாலை (02) முதல் அமுலாகும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள்( CEYPETCO) மற்றும் லங்கா ஐ.ஓ.சி.( LANKA IOC) எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளன.
பெற்றோல் 92: ரூ. 4 இனால் – ரூ. 361 இலிருந்து ரூ. 365
பெற்றோல் 95: ரூ. 3 இனால் – ரூ. 417 இலிருந்து ரூ. 420
ஒட்டோ டீசல்: ரூ. 10 இனால் ரூ. 341 இலிருந்து ரூ. 351
சுப்பர் டீசல்: ரூ. 62 இனால் – ரூ. 359 இலிருந்து ரூ. 421
மண்ணெண்ணெய்: ரூ. 11 இனால் – ரூ. 231 இலிருந்து ரூ. 242
இதேவேளை நேற்று 6 மணி முதல் அமுலாகும் வகையில் SINOPEC Energy நிறுவனம் பின்வருமாறு எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.
பெற்றோல் 92: மாற்றமில்லை – ரூ. 358
பெற்றோல் 95: ரூ. 6 இனால் – ரூ. 414 இலிருந்து ரூ. 420
ஒட்டோ டீசல்: ரூ. 10 இனால் ரூ. 338 இலிருந்து ரூ. 348
சுப்பர் டீசல்: ரூ. 61 இனால் – ரூ. 356 இலிருந்து ரூ. 417

