முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலுக்கு நாம் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்று (15) நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய திரு.பிரேமதாச, தேர்தல் நாட்காட்டியை மாற்றியமைப்பது தவறான ஜனநாயகமற்ற நடவடிக்கையாகும்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான பிரேரணையை அரசாங்கம் கொண்டு வர எதிர்பார்த்தால், எதிர்க்கட்சிகள் அத்தகைய நடவடிக்கைக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலுக்கான சவாலை ஏற்றுக்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

