பொலிஸ் மா அதிபருக்கு மேலும் சேவை நீடிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெறவிருந்த பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு மூன்று மாத சேவை நீடிப்பு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜுன் மாதத்துடன் சேவை நீடிப்பு முடிவடையவுள்ள நிலையில் மீண்டும் சேவை நீடிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

