இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் ஒரு வாரத்துக்கும் மேலாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை இடம்பெற்று வருவதுடன் நாளை பெரும்பாலும் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த தகவலை இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உறுதிப்படுத்தினார.

