32.2 C
Colombo
Monday, October 5, 2026

இணுவில் கந்தன் உலகப் பெருமஞ்சம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி ஆலய தைப்பூச திருநாளான இன்று இரவு உலகப் பெரு மஞ்சம் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

தவில் நாதஸ்வர கலைஞர்கள் மங்கள வாத்தியம் இசைக்க, தமிழ் பாரம்பரியங்களை கலைஞர்கள் வெளிப்படுத்த கந்தசுவாமியின் மஞ்சம் பவனி வந்தது.

வள்ளி-தெய்வானை சமேதரராய் முருகப் பெருமான் மஞ்சத்தில் எழுந்தருள இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

இன்று காலை பால்குட பவனியும் இடம்பெற்றது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles