28.9 C
Colombo
Friday, August 21, 2026

தியாக தீபம் திலீபனின் ஆவண காட்சியகம் நல்லூரில் ஆரம்பித்து வைப்பு!

தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் “பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!” எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் நேற்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.

நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் நேற்று வெள்ளிக்கிழமை (20) மாலை 6.30 மணியளவில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் பிரதான தூபி முன்றலில் மலரஞ்சலி செலுத்தி ஆரம்பமாகியதுடன் பின் வரலாற்று ஆவணக் காட்சியகத்தை மாவீரர்களின் பெற்றோரால் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் வரலாற்று புகைப்படங்கள் என்பன தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

இதன்போது மாவீரர்களின் பெற்றோர், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles