29.5 C
Colombo
Friday, August 21, 2026

யாழில் வாக்களிப்பில் ஆர்வத்துடன் பங்கேற்கும் மக்கள்!

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பொதுமக்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமான நிலையில் வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் தினத்தில் வன்முறைகள் மற்றும் சட்டமீறல்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

அரசியல் தலைவர்களும் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாக்களிப்பு

 

யாழ்ப்பாண மாவட்டத்தில் சனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பானது 511 வாக்களிப்பு நிலையங்களிலும் இன்று (21) காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சுமூகமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதாக, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அறியத்தந்துள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles