உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு பிரிவினரின் தடுப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று 9.30 மணிக்கு ஆரம்பமாகும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிஷாட் பதியுதீன் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக அவர் இவ்வாறு நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுப்பாராயின் அவரை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில் குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

