25 C
Colombo
Saturday, October 10, 2026

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி உயிரிழப்பு!

ரஷ்யாவின் மிக முக்கியமான தலைவராகக் கருதப்பட்ட அலெக்ஸி நவல்னி, சிறையில் இறந்துவிட்டதாக, அந்நாட்டு சிறைத்துறை செய்தியை மேற்கோள் காட்டி, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை விமர்சித்து வந்த எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, அரசுக்கு எதிராக செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, 19-வருட கால சிறைத்தண்டனை அளிக்கப்பட்டு, ரஷ்ய சிறைச்சாலைகளிலேயே மிகவும் மோசமானதாக கருதப்படும் ஆர்க்டிக் பீனல் காலனி எனும் சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது 47 வயதாகும் அலெக்ஸி நவால்னி, சிறையில் மயக்கமடைந்ததாகவும், அவசர மருத்துவ குழுவினர் விரைந்து வந்து அவரை காப்பாற்ற போராடியும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாகவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அலெக்ஸி நவால்னியின் உயிரிழப்பிற்கான காரணம் சரிவரத் தெரியவில்லை.

நவால்னியின் சட்டத்தரணி லியோனிட் சோலோவ்யோவ் இத்தகவல் குறித்து விளக்கமளிக்க மறுத்துவிட்டார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

நவால்னியின் செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ், அவரது மரணம் குறித்து தங்களுக்கு இன்னும் எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மக்களை ஈர்க்கும் பிரசாரகராக பார்க்கப்பட்ட நவால்னி, 2018 ஆம் ஆண்டு ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட முன்வந்தார்.
அதற்காக பிராந்திய அளவிலான பிரசார அலுவலகங்களை அவர் அமைத்தார். ஆனால், இறுதியில் அவர் வாக்களிக்கக் கூட தடை விதிக்கப்பட்டது.

கடந்த 2020 ஆம் ஆண்டு இவர் நரம்பு மண்டலங்களைப் பாதிக்கும் விஷ அமிலம் செலுத்தப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளானார்.

இதற்காக ஜேர்மனியில் சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர், அச்சுறுத்தல்களைத் தாண்டியும் 2021ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் ரஷ்யாவிற்குள் நுழைந்தார்.

அதிபர் விளாடிமிர் புடினின் மிகக் கடுமையான விமர்சகராகப் பார்க்கப்பட்டவர் நவல்னி. நவால்னிக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்மீது போடப்பட்ட வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாகப் பரவலாகக் கருதப்பட்டது.

கடந்த ஆண்டு இறுதியில் கடுமையான சிறைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஆர்க்டிக் தண்டனை காலனி சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.

ரஷ்ய அதிகார மையத்தின் ஊழல்களைக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் அம்பலப்படுத்தி வருகிறார். இவரது விசாரணை வீடியோக்கள் கோடிக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles