உலகளாவியரீதியில் சமூக ஊடகமான முகநூல் தளம்(Facebook) சில மணி நேரம் முடங்கியிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சர்வதேச ரீதியில் பல பாவனையாளர்களும் முகநூல் முடங்கியிருந்ததாக எக்ஸ் வலைத்தளத்தில் ஹாஷ்டாக்கள் (Hashtag) பதிவிட்டுள்ளனர்.
இருப்பினும் முகநூல் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான மெட்டா இந்த முடக்கம் தொடர்பில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

