29.5 C
Colombo
Friday, August 21, 2026

ஸ்ரீ ரங்கத்தில் மோடி வழிபாடு – கம்பராமாயணத்தையும் கேட்டு மகிழ்ந்தார்!

தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி ஆலயத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (20) வழிபாடு செய்தார்.

கம்பர் தனது ராமாயணத்தை முதன்முதலில் வெளி உலகத்துக்கு அரங்கேற்றிய கோவிலில் கம்ப ராமாயணத்தின் பாராயணத்தையும் பிரதமர் கேட்டறிந்தார்.

இதன்போது இலங்கையில் இருந்து கம்பவாரிதி ஜெயராஜ்ம் பங்கேற்றார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“ஶ்ரீ ரங்கநாதசுவாமி கோவிலில் வழிபாடு செய்யும் பாக்கியம் கிடைத்தது. இந்த கோவிலுடனான பிரபு ஶ்ரீராமரின் தொடர்பு நெடியது. பிரபு ஸ்ரீ ராமர் வழிபட்ட கடவுளால் நானும் ஆசீர்வதிக்கப்பட்டதை பாக்கியமாக உணர்கிறேன்.”

அதேவேளை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பிரதமர் மோடி தனுஷ்கோடி செல்கிறார்.

பொலிசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி கொண்டு வரப்பட்ட நிலையில் சனிக்கிழமை பகல் 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணி வரை பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரிச்சல் முனையில் உள்ள கோதண்ட ராமர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்யவுள்ளார்.

அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவையொட்டி 11 நாள் விரதம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles