29.5 C
Colombo
Friday, August 21, 2026

விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி

தென்னிந்திய நடிகரும் தேசிய முற்போக்கு திராவிடக் கழக (தே.மு.தி.க) தலைவருமான விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.

இது குறித்து தேமுதிக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்படுகிறது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை விஜய்காந்த் மருத்தவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது தேமுதிக சார்பில் வெளியான செய்திக்குறிப்பில் வழக்கமான மருத்துவ பரிசோதனை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா புதிய திரிபு இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

இரண்டாம் இணைப்பு

நடிகர் விஜயகாந்த் காலமானார்!

நடிகர் விஜயகாந்த் காலமானார்!

புரட்சி கலைஞர் தொடக்கம் கேப்டன் வரை…!!

புரட்சி கலைஞர் தொடக்கம் கேப்டன் வரை…!!

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles