29.5 C
Colombo
Friday, October 9, 2026

ஊரடங்கு நேரத்தில் யாழில் பொதுமக்களின் முகம் சுழிக்க வைக்கும் செயற்பாடு.

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளாந்தம் அதிகரித்துவரும் நிலையில்
அதனை கருத்திற்கொள்ளாது பொதுமக்கள் செயற்படுவது பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது.

நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமையும் யாழ் மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை மீறி வீதிகளால் அதிகமானோர் பயணிப்பதை அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறு பொதுமக்கள் அலட்சியமாக செயற்படுவது கொரோனா தொற்று நிலையை இன்னமும் வீரியப்படுத்துமென கருதுகின்றனர்.

நேற்று கொக்குவில் பகுதியில் காவல்துறை, விசேட அதிரடிப் படை மற்றும் இராணுவத்தினரால் விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles