கில்மிஷாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் சந்தித்து வாழ்த்தவுள்ளார் என நம்பத்தகுந்த ஆதாரங்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் பயணமாக வியாழக்கிழமை (04) வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். இதன்போது கில்மிஷாவையும் சந்திக்கவுள்ளார்.
இந்தியாவின் சீ தமிழ் தொலைக்காட்சி அலைவரிசை நடத்திய சரி கம ப லிட்டில் சம்பியன் போட்டியில் மகுடம் சூடிய இலங்கையின் கில்மிஷா உதயசீலனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கில்மிஷா உதயசீலன் நாட்டிற்கு புகழ் சேர்த்தமைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளதுடன், சிறுமியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எதிர்காலக் கல்வி மற்றும் இசை வாழ்வில் வெற்றிபெற தனது ஆசிகளையும் தெரிவித்திருந்தார்.

