28.9 C
Colombo
Friday, August 21, 2026

வடமாகாணத்திற்கு புதிதாக 54 வைத்திய அதிகாரிகள் நியமனம்!

மத்திய சுகாதார அமைச்சினால் உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்த வைத்திய அதிகாரிகளுக்கு நேற்று வியாழக்கிழமை (23)நாடளாவிய ரீதியில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன.

இந்நியமனத்தில் வடமாகாணத்திற்கு புதிதாக 54 வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதில் 15 பேர் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட வைத்தியசாலைகளுக்கும், 14 பேர் மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கும், 10 பேர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளுக்கும், 8 பேர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைகளுக்கும், 7 பேர் வவுனியா மாவட்ட வைத்தியசாலைகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக மேலும் 6 வைத்திய அதிகாரிகள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் மத்திய சுகாதார அமைச்சினால் புதிதாக வழங்கப்பட்ட வைத்திய அதிகாரிகளின் நியமனத்தின் போது வடமாகாணத்திற்கு 188 வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles