24.5 C
Colombo
Thursday, October 8, 2026

அசாத் சாலி விடுதலை!

மதங்களுக்கிடையில் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்

மதங்களுக்கிடையில் கலவரத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்தை மீறிய இரண்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படைப்படையில்  அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles