யாழ்ப்பாணம் – மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மாதகல் கிழக்கு ஜெ 150 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 3 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக சட்டவிரோத அளவீட்டு பணிகள் இன்று காலை நில அளவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்தது.
இதன் போது அளவீட்டு பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக குறித்த இடங்களில் ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்
இதனை தொடர்ந்து காணி அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிட்டு நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் அவ்விடத்தில் இருந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


