28.9 C
Colombo
Friday, August 21, 2026

கிணற்றினுள் நீந்தச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு – சுழிபுரத்தில் துயரம்!

சுழிபுரத்தில் உள்ள கிணறு ஒன்றிலே நீந்துவதற்காக சென்ற மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று (06) மூளாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது நண்பர்களுடன் பாடசாலையில் சிரமதானம் செய்யப்போவதாக கூறிவிட்டு சுழிபுரம் – திக்கரை பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலே நீந்துவதற்காக சென்றிருந்தார்.

அவர் நீந்திக் கொண்டிருக்கும்போது நீரில் மூழ்கியுள்ளார். இதனை அவதானித்த நண்பர்கள் அயலில் உள்ளவர்களை அழைத்து அவரை காப்பாற்றி மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தனர்.

அங்கிருந்து குறித்த இளைஞனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும்போது அவரது உயிர் பிரிந்தது.

குறித்த நபரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மூளாய் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் ரஜீவன் என்ற 18 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles